முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபைக்கு இறகுச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டது.
இந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர் கட்சியினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் தெஹிவளை, கல்கிஸ்ஸை மற்றும் ரத்மலான பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ஒரே அணி இறகுகள் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் செயற்திட்டத்தினை அடிப்படையாக வைத்து மாநகர சபை அமர்வுகளில் சமூக நீதிக் கட்சி பல முன்மொழிவுகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் பிரச்சாரங்களிலும், விஞ்ஞாபனத்துக்கான கொள்கை வகுப்பதிலும் முன் நின்று செயற்பட்ட சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி இறுதி இரண்டு வருடங்களும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையை அலங்கரிப்பார் என்று கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.