அம்பாறை மாவட்டம், பாலமுனை, மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கலாசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழா, நேற்று (01) சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.