உறைந்து போன தாயின் உணர்வு: இஸ்ரேலிய தாக்குதலில் 9 குழந்தைகளைப் பறிகொடுத்த ஆலா அல்-நஜ்ஜாரின் கணவரும் உயிரிழந்தார்!

Date:

காசாவில் குழந்தை நல மருத்துவராக பணியாற்றிய ஆலா அல்-நஜ்ஜாரின் குடும்பத்தில் இன்னொரு பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவரது கணவரும்  உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கிசான் அல்-நஜ்ஜார் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து கான் யூனிஸில் உள்ள அவர்களின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவர்களின் 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் இறந்தனர்.

தாக்குதல் நிகழ்ந்த நேரத்தில்  ஆலா, மருத்துவமனையில் தனது மருத்துவ பணியை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதே நேரத்தில் தனது சொந்த வீட்டில் குடும்பமே அழிந்துவிட்டது என்பதை அவர் அறியவே இல்லை.

கற்பனை செய்ய முடியாத  அளவுக்கு, டாக்டர் ஆலா  தனது ஒன்பது குழந்தைகளின் உடல்களையும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உறைந்து போனார்.

40 வயதான ஹம்தி அல்-நஜ்ஜார்  ஒரு மருத்துவர் – அவரது மூளை, நுரையீரல்,வலது கை மற்றும் சிறுநீரகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவருக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வந்ததாகவும் மருத்துவர் ஏஞ்சலோவா-சீ தெரிவித்தார்.

அந்தத் தம்பதியினரின் உயிர் பிழைத்த மகன் ஆதாமும் காயமடைந்தார். மருத்துவர் ஏஞ்சலோவா-சீ, அவர் “நியாயமான அளவில் நன்றாக” இருப்பதாக தனது சக ஊழியர்கள் தன்னிடம் கூறியதாகக் கூறினார்.

இந்த குடும்பத்தின் அழிவும், மரணங்களும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இது போன்று ஒரு குடும்பத்தின் முழுமையான அழிவை மனித மனம் ஏற்றுக் கொள்வது அரிது.

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...