இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதிலுள்ள தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

Date:

யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதிலுள்ள  தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க குடிவரவு, குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  பல தசாப்தங்களாக அகதியாக தஞ்சமடைந்திருந்த ஒருவர் கடந்த  வாரம்  மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய நிலையில், கைது செய்யப்பட்டமை  தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில்  விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு  தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து ஒரு தொகுதியினர்  இந்தியாவுக்கு சென்றனர். இவர்களில் அதிகமானோர்  தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். தற்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் நீண்ட காலமாக இவர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு  குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக  உள்ளன. இந்த சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து  அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த மூன்று வயது குழந்தை உட்பட மூவர், தலைமன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது இளம் தம்பதியினர்.

இவர்களது  மூன்றரை வயது குழந்தையும் இதிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்குடும்பத்தினர்,கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும்  விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சட்டபூர்வமற்ற ரீதியில் நாட்டை விட்டு வெளியேறியவர்களைக் கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர்  அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார் .

இந்த விடயம் தொடர்பில்,  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடியதாகவும், அவர் குறித்த சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கையை  எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...