மோசமான காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகள்

Date:

நாட்டில்,கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை மற்றும் கடுமையாக வீசிய காற்று என்பவற்றால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக விவசாயிகள் காப்பீட்டு சபை மதிப்பீட்டு பணிகளை ஆரம்பித்துள்ளது.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கே இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.இதற்காக ஐந்து ஏக்கர் வரை இழப்பீடுகள் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்கள் பயிர்ச் சேதம் குறித்து விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற தொலைபே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால், மாத்தறை மாவட்டத்தில் சுமார் 100 விவசாயிகளுக்குச் சொந்தமான 130 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், இவர்களுக்கும் எதிர்வரும் வாரங்களில் நஷ்ட ஈடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...