ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெயரில் முறைகேடு:சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார பணி இடைநீக்கம்

Date:

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற பெயரில் கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் கைதிகளை அனுமதியின்றி விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (08) 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டது.

 

அதேவேளை நேற்று முன்தினம் (07) அவர் 05 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சில கைதிகளை சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக ஜனாதிபதி மன்னிப்பு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இருப்பினும், அந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

முறையான அங்கீகாரம் இன்றி கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடிய கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...