ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே சமூக அரசியல் மாற்றத்தை சாத்தியமாக்க முடியும்:- ஜனாதிபதியின் பொசன் செய்தி

Date:

பொசன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசன் தினத்திலாகும்.

சமூக முன்னேற்றத்துடன் ஆன்மீக மலர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்த அந்த செழுமையான நிகழ்வு நமது நாட்டில், கலாசார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்தியது.

புத்த தர்மம் மற்றும் அதனுடன் இணைந்த வாழ்க்கை சூழலுக்கு வழிகாட்டி, தர்மங்களால் மேம்பட்ட சமூகத்தின் தோற்றத்திற்கும் பொசொன் காரணமாக அமைந்தது.

இதேபோல், ஆட்சியாளரும் மக்களும் வன்முறையைக் கைவிட்டு அகிம்சையைத் தழுவுவதே இதன் அடையாளமாகும். பொசொன் பௌர்ணமி தினத்தில் வலியுறுத்தப்படும் உயர்வான குணங்களில் ஒன்றாக அஹிம்சையே காணப்படுகிறது.

குறிப்பாக, முழு உலகமும் ஒவ்வொரு நிலைமைகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில், அகிம்சை என்பது தன்னுடையதும் பிறருடையதும் சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாப்பதாக அமையும்.

அது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நடத்தையாகும். எனவே, பொசன் பௌர்ணமி தினத்தில் பொதிந்துள்ள அகிம்சையின் பெறுமதி இன்றளவில் அதிகமாக உணரப்படுகிறது.

மஹிந்த தேரர் இந்த நாட்டிற்கு வழங்கிய உன்னதமான பௌத்த தர்மத்தில், “ஒருவர் வளமானதை வளமானதாகவும் வளமற்றதை வளமற்றதாகவும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு அந்த எண்ணமும் ஒழுக்கமும் கொண்ட பொறுப்புள்ள மக்களே தேவைப்படுகின்றனர் என்பதையும் வலியுறுத்தினார்.

அந்த சமூகத்தை மீண்டும் இலங்கையில் கட்டியெழுப்பி, நாட்டுக்குத் தேவையான புதிய நெறிமுறை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அணுகுமுறைகளுடன் கூடிய நவீன நாகரிகம் கொண்ட நாட்டை உருவாக்கும் கைவிடமுடியாத பொறுப்பு, எம் மீது சாட்டப்பட்டுள்ளது.

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை நடைமுறை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றுபடுவோமென பொசன் தினத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசன் தினமாக அமையட்டும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...