அயன் டோம் தயாரித்த ரஃபேல் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த ஈரான் ஏவுகணைகள்: உலக நாடுகளிடம் உதவி கேட்கும் இஸ்ரேல்!

Date:

இஸ்ரேலுக்கு பாதுகாப்பை கொடுப்பது ‘அயன் டோம்’ எனப்படும் வான் பாதுகாப்பு அம்சம்தான். இதனை தயாரித்த ரஃபேல் நிறுவனத்தின் இஸ்ரேலிய ஆயுத கிடங்கை ஈரான் நேற்றிரவு குறி வைத்திருக்கிறது. இதனால் இஸ்ரேல் கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபாவில் இந்த ஆயுத கிடங்கும், எண்ணெய் கிடங்குகளும் இருக்கின்றன. இவற்றை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளான அயர்ன் டோம், டேவிட்ஸ் ஸ்லிங் மற்றும் ஆரோவ் போன்ற பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளை இயக்கியுள்ளது. ஆனால் இதெல்லாம் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாக, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 4வது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் முற்றி உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக நேற்று இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது.

கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. இந்நிலையில்  ஈரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...