இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் வேலை தேடும் இலங்கையர்களுக்கும் சிவப்பு அறிவிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலைமை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேலை தேடும் இலங்கையர்களும், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக அனுப்பப்படுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தல் இஸ்ரேலில் பணிபுரிந்து, மீண்டும் வேலைக்கு இஸ்ரேலுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும் பொருந்தும்.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் (SLBFE) சட்டத்தின் பிரிவு 39 (1) (b) இன் படி,  மறு – அறிவிப்பு வரும் வரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது.

அத்துடன், எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டல்கள் இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையின் (PIBA) அறிவிப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...