16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும்

Date:

எதிர்வரும் ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை 16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  அறிவித்துள்ளது.

 

தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் நுளம்பு பரவல் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்த சமூக நிபுணர் வைத்தியர் பிரிசில்லா சமரவீர குறிப்பிட்டார்.

 

இதற்கு அமைவாக, 16 மாவட்டங்களில் உள்ள 111 சுகாதார மருத்துவ பிரிவுகளில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும்.

இதன்போது அதிக ஆபத்துள்ள நுளம்பு பெருகும் பகுதிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், சுற்றுச் சூழல் தொடர்பில் கவனக்குறைவாக செயற்படும் நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 26,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.டெங்கு நோயாளிகளில் 45% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...