சிவஶ்ரீ சுந்தரராம குருக்களுக்கு கனடாவில் கௌரவம்…!

Date:

மதிப்பிற்குரிய சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் அவர்களுக்கு, அவரது தெய்வீக கிரியைகள் மற்றும் சமூகத்திற்கான அற்புத சேவையை பாராட்டி, “கவிச்செம்மல் கிரியாதிலகம்” எனும் கௌரவ பட்டம் வழங்கி பெருமையுடன் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 19 ஆம் திகதி, கனடா  மிசிசாகாவில் அமைந்துள்ள ஶ்ரீ ஹரிகரசுதன் ஐயப்பன் ஆலயத்தில், ஆலய அவையோர் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இந்த சிறப்புவிழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவில், சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், தமிழ் சமூக தலைவர்கள் மற்றும் பண்பாட்டு அமைப்பினர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் கிரியைகளை நினைவுபடுத்தும் விதமாக வழங்கப்பட்டது.

சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயா அவர்கள் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர்களுள் ஒருவராகவும், அனைத்து மதங்களிடையிலான ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்காக சிறப்பாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...