ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த குழு விவாதம் கொழும்பில்

Date:

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமீபத்திய மோதல் மற்றும் அதன் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய தாக்கங்களை ஆராய்வதற்காக சிறப்பு குழு விவாதம் ஒன்று எதிர்வரும் ஜூன் 26, வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் கொழும்பு 10 விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இந்த குழு விவாதத்தில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸதீன், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மற்றும் அரசியல் ஆய்வாளர் டாக்டர் ரவூப் ஸெய்ன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இந்த விவாதம், ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள், நடுநிலை நாடுகளின் பங்கு, பாதுகாப்பு சவால்கள் மற்றும் எதிர்கால நிலைமைகள் பற்றி ஆழமான பார்வையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...