மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

Date:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, மத்தியகிழக்கு போர்ச்சூழல் தொடர்பாக ஆராய்ந்து, தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றி மீளாய்வு செய்து, பொருத்தமான விதந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது.

இதேவேளை, குறித்த உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்த குழுவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...