மூளைச்சாவு அடைந்த நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சை: பெண் மருத்துவ நிபுணரின் மோசடி

Date:

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், மூளைச்சாவு அடைந்த நோயாளிகளுக்கு கூட அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன மீதான ஊழல் வழக்கின் போது, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளின்படி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஏற்கனவே மருத்துவ ரீதியாக மூளைச்சாவு அடைந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வெளிப்புற வென்ட்ரிகுலர் வடிகால்  மற்றும் வென்ட்ரிகுலோபெரிட்டோனியல்  செருகுவது போன்ற அறுவை சிகிச்சை முறைகளைச் செய்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில், மூளைச்சாவடைந்த நோயாளிகளின் இதய துடிப்பு மட்டும் ஐந்து நாட்கள் வரை செயற்கையாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஆணையகம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை தலைமை எழுதுவினைஞர் மற்றும் மருத்துவ உபகரண விநியோகஸ்தர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணையின் போது கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறுவை சிகிச்சைகளுக்கு எந்த சிகிச்சை மதிப்பும் இல்லை என்றும், குறித்த மருத்துவர் தமது கணவருடன் தொடர்புடைய ஒரு தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட அறுவை சிகிச்சை உபகரணங்களை விற்பனை செய்வதன் மூலம் நிதி ஆதாயத்தை ஈட்டுவதற்காகவே இந்த செயற்பாடுகளை மேற்கொண்டதாக ஆணையகம் கூறியுள்ளது.

இந்த மருத்துவர் உயிருள்ள நோயாளிகளுக்கு மாத்திரம் அல்ல ஏற்கனவே மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு கூட, சில சந்தர்ப்பங்களில் ஐந்து நாட்கள் வரை, நியாயமற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார் என்று ஆணையகத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளிகளால் தொலைபேசி மூலம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் உட்பட, இந்த மருத்துவர் தொடர்பாக இன்றுவரை சுமார் 92 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதிவாதிகளின் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் அனைத்து சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, தலைமை நீதிவான் பிணை மனுக்களை நிராகரித்து, மூன்று சந்தேக நபர்களையும் ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...