ஜூன் 13 முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஈரானில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரமான சம்பவத்திற்கு, கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
அதேநேரம் உயிரிழந்தோருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு-05, இல: 43, ஜாவத்தை வீதியிலுள்ள ஈரான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (30) மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை (01)காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை ஈரான் தூதரகம் திறந்திருக்கும்.
இரங்கல் செய்திகளை பதிவு செய்ய , இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அழைக்கப்படுகின்றனர்.