இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: எலோன் மஸ்க் அறிவிப்பு

Date:

இலங்கை முழுவதும் (Starlink) ஸ்டார்லிங்க் இணைய சேவையை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் இணைய சேவை  அதிவேகமாக செயல்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தத்தைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் மாதம் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது.

கடந்த வாரம், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னே, ஸ்டார்லிங்க் குறித்த ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறினார்.

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது.

இது தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.

செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...