பந்தாவ, பொல்கஹவலையைச் சேர்ந்த மாணவன் எம்.ஆர். ஹமி, மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (எண் கணிதம்) போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று, தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த ஜூன் 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த உலகளாவிய போட்டியில், 12 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜீனியஸ் சர்வதேச கல்லூரியின் மாணவராக கல்வி பயிலும் எம்.ஆர். ஹமி, தனது ஆசிரியை சரீனா அன்வர் அவர்களின் வழிகாட்டலில் இந்த வெற்றியை அடைந்துள்ளார்.
இவர், S.P.M. ரினாஸ் மற்றும் பாத்திமா ருஷ்தா ஆகியோரின் புதல்வராவார்.
இவர் பெற்றுள்ள இந்த சாதனை, இலங்கை மாணவர்களின் திறமைக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.