நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட அரச கரும மொழி வாரத்தின் நிறைவு விழா இன்று (07) கொழும்பில் நடைபெற்றது.
2025 ஜூலை 1ஆம் திகதி அரச கரும மொழி தினமாக அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வாரத்தில் பல நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், அமைச்சின் செயலாளர், கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஸ், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ், பிரதமரின் செயலாளர், பேராசிரியர் எஸ்.ஜே. யோகராஜா, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் மூலம், மொழி சமத்துவம், இன ஒற்றுமை மற்றும் அரச நிர்வாகத்தில் இரு மொழிகளையும் உரிய முறையில் செயல்படுத்துவதற்கான அரசின் உறுதியை வலியுறுத்தும் நோக்கமாக இருந்தது.