பாராளுமன்ற உறுப்பினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்துல் வாசித் சத்தியப்பிரமாணம்

Date:

மொஹமட் சரிபு அப்துல் வாசித் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (08)   சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியலின் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.எஸ் அப்துல் வாசித் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஜூலை 3 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு அமைய பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

2000ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த அவர் 2006ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் 2011 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று பொத்துவில் பிரதேச சபையின் தலைவராகக் கடமையாற்றினார்.

அத்துடன், 2020 மற்றும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டிருந்தார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...