பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாவனெல்லை ஸுஹைல் பிணையில் விடுவிப்பு

Date:

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாவனெல்லை ஸுஹைல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஸுஹைலின்  வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

விசாரணையின் போது ஸுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அநுராத ஹேரத், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு நீதவானைக் கோரும் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதவானிடம் சமர்ப்பித்தார்.

அதனை கருத்திற்கொண்ட கல்கிஸ்ஸை நீதிவான், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு பணித்தார்.

இவ்வழக்கில் ஸுஹைல் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கீத்ம பர்னாந்து, சட்டத்தரணிகள் இல்ஹாம் ஹஸனலி, அஷ்ரப் முக்தார் மற்றும் பெஹ்ஷாத் ஆகியோர் ஆஜராகினர்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...