சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் வளரும் தலைமுறையினர்: வியப்பில் ஆழ்த்திய சிறுவர், சிறுமிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Date:

பத்திரிகையாளர் சந்திப்புகள் என்பது வழக்கமாக பெரியவர்கள், அமைப்புத் தலைவர் அல்லது நிர்வாகிகள் நடத்தும் நிகழ்வாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாடு,கோவையில்  நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிகையாளர்களையே வியப்பில் ஆழ்த்தியது.

(Children Islamic Organisation) என்ற இஸ்லாமிய சிறுவர்-சிறுமியர் அமைப்பின் சார்பில்,  கோவையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பை 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் முழுமையாக நடத்தினர்.

இது ஒரு புதுமையான முன்னேற்றமாகவும், பாராட்டத்தக்க முயற்சியாகவும் அமைந்தது.

இந்த அமைப்பு கோவையில் மட்டும் 25 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது 750க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் ஒருங்கிணைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 25ஆம் திகதி முதல், நாடு முழுவதும் “மண்ணில் கைகள், இந்தியாவில் இதயங்கள்” (அதாவது மண்ணில் உழைக்கும் கைகள், நாட்டுக்காகத் துடிக்கும் இதயங்கள்) என்ற தலைப்பில் பரப்புரை நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தோட்ட பராமரிப்பு போன்ற செயல்களில் சிறுவர்களை ஈடுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரப்புரையின் ஒரு பகுதியாக, பத்து இலட்சம் மரங்கள் நாட்டும் திட்டத்தையும் இக்குழந்தைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு சிறுமி ஜைனர் தலைமையில் தொடங்கப்பட்டது. தன்னம்பிக்கையுடன் பேசினார். தொடர்ந்து,  அமைப்பின் பொறுப்பாளரான சிறுமி நபீலா கரம், மரம் வளர்ப்பு குறித்த பரப்புரை விவரங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் வழங்கினார்.

அவருடைய நிதானமான பேச்சு, தெளிவான உச்சரிப்பு, துல்லியமான தகவல்கள் பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. பின்னர் எழுந்த கேள்விகளுக்கும் தடுமாறாமல் பதிலளித்த நபீலா, கூட்டத்தில் அனைவரையும் அசத்தினார்.

இளம்தலைமுறையின் இந்த வகை முயற்சி ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும். அவர்களுக்கான இந்த வழிகாட்டுதலுக்கும், சமூக விழிப்புணர்வை ஊட்டும் நிகழ்வுகளுக்கும் ஏராளமான வாழ்த்துகள்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...