பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர் நடத்தி வரும் “சபாத் இல்லத்தை” உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது (கன்னி) அமர்வில், தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்ததுடன், சபாத் இல்லத்தினை எதிர்த்து ஒருமனதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு சபை முடிவில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.