மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

Date:

மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வரலாறு காணாத வகையில் ஒரு மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அருள் மிகு குடும்பம், இன்பம் நிறைந்த இல்லம்” எனும் கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சி , ஆகஸ்ட் 7 முதல் 11 வரை கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது.

யார் யார் கலந்து கொள்ளலாம்?

  • பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் (குடும்பமாக)
  • தரம் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகள்
  • பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகள்
  • பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவிகள்
கண்காட்சியைப் பார்வையிடுபவர்கள் பின்பற்ற வேண்டிய படிமுறைகள்**
1. திகதியையும் நேரத்தையும் தெரிவு செய்தல்

• ஆகஸ்ட் 7 முதல் 11 வரையிலான திகதிகளில் தங்களுக்கு வசதியான ஏதேனும் ஒரு திகதியைத் தெரிவு செய்யலாம்.

குறிப்பு:பாடசாலைகள் மற்றும் பெண்கள் அரபுக் கல்லூரிகளுக்கு 7, 8 மற்றும் 11 ஆம் திகதிகள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கவனத்தில்கொள்க.

• நீங்கள் தெரிவு செய்த திகதியில் பின்வரும் நேர ஒதுக்கீட்டில் (Time slot) விரும்பிய ஒன்றை பதிந்து கொள்ளலாம்:

1. Morning Slot: 8.00 am – 12.00 noon
2. Evening Slot: 1.00 – 5.00 pm
குறிப்பு: 12:00 மணிக்கு முதலாவது நேர ஒதுக்கீடு நிறைவடையும்.

2. பதிவு செய்தல்

நீங்கள் தெரிவு செய்த திகதியையும் நேரத்தையும் பின்வரும் இலக்கத்தைத் தொடர்பு கொண்டு முற்பதிவு செய்து கொள்ளவேண்டும். 0764419155

குறிப்பு:
1. குறித்த இலக்கத்திற்கு பின்வரும் நேரங்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி வினயமாய் வேண்டுகிறோம்.
 காலை 9.00 am முதல் 5.00 pm வரை &
மாலை 7.00 pm முதல் 9.00 pm வரை

2. பதிவு செய்யும்போது கண்காட்சியில் கலந்து கொள்ளும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டுச்சொல்வதன் மூலம் சங்கடங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

3. “Community WhatsApp” குழுவில் இணைக்கப்படுதல்

பதிவு செய்து கொண்ட ஒவ்வொருவரும் குறிப்பிட்ட திகதிக்குரிய “Community WhatsApp” குழுவில் இணைக்கப்படுவீர்கள். கண்காட்சி பற்றிய மிக முக்கியமான அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறை மூலம் பகிரப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.

எனவே, பதிவின்போது உங்களது WhatsApp இலக்கத்தையும் எங்களுக்கு வழங்குவதன் மூலம் மேலதிக தகவல்களை அறியலாம். குழுவில் இணைக்கப்படாத பட்சத்தில் அது குறித்து எங்களுக்கு மீள அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

4. கண்காட்சியைப் பார்வையிடுதல்

நீங்கள் பதிவு செய்த திகதி மற்றும் குறித்த நேரத்தில் மாவனல்லை ஆயிஷா வளாகத்திற்கு வருகை தரவும். வளாக நுழைவாயிலில் அமைந்துள்ள “Ticket counters”இல் “Tickets” களை கொள்வனவு செய்யலாம்.
Ticket விலை விவரங்கள்
1. வயது 5 மற்றும் அதற்குக் கீழ்: இலவசம்
2. வயது 5 முதல் 12 வரை: 100 LKR
3. வயது 12க்கு மேல்: 200 LKR
May be an image of text that says 'தாய்மை பிருத்திக்கான ஆக்ஷா கல்விக் கல்லூர் MAWANELLA வெள்ளி விழா சிறப்புக் கண்காட்சி அருள் மிகு குடும்பம்- இன்பம் நிறைந்த இல்லம் A FIVE-DAY EVENT: AUG7→8→9→10→11 AUG கண் காட்சியின் 8 பகுதிகள் UNIT1 இஸ்லாமிய குரும்பத்தின் நோக்கங்கள் விருத்தியும் UNIT இஸ்லாமிய வீரு UNIT6 இஸ்லாமிய இல்லம் UNIT UNIT& UNIT2 திருமண திருமணவாழ்க்கை வாழ்க்கை UNIT3 பெற்றோரியம் UNIT4 கழந்தைகனின் வனர்ச்சியும் / நவீன குரும்ப சவால்கள் ஆயிஷா உயரளு கல்விக் NoW! 0764419155 கல்னரியின் வரலாறு+ மற்றும் தாய்மை அபிவிருத்தி BOOKING XKINGTIME9.AM-5.PM/7.PM-9.P .00 PM TIME 9.00 AM 5.00 7.00P 7.0'

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...