இலங்கையில் நடந்த மிகப் முக்கிய மனிதப் படுகொலைச் சம்பவமான குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘பயணிகளைக் கொல்லுதல்’ (Killing the travellers)ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் நாளை (30) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான ருகி பெர்னாண்டோ, நவாஸ் மொஹமட், சமூக நீதிக்கான அகடமி தலைவர் நஜா மொஹமட் கலந்துகொள்ளவுள்ளனர்.
“கில்லிங் த டிரவலர்ஸ்” குறுந்திரை ஆவணப்படம், பாதிக்கப்பட்டவர்களின் குரலை எடுத்துச் சொல்லும் படமாக அமைந்துள்ளது.