சுகாதாரத்துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது: இம்ரான் எம்.பி

Date:

சுகாதாரத்துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள், சீருடையுடன் கலாச்சார ஆடைகளை அணிந்து பணியாற்றி வந்த நிலையில், இந்த உத்தரவு மீறப்படின் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடமை ஏற்றது முதல் தற்போது ஓய்வூதியம் பெறும் வயதையும் அடைந்துள்ள இதுவரையான காலத்தில் எனது சீருடையுடன் கலாச்சார உடையும் சேர்த்து அணிந்தே கடமைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது நாம் கலாச்சார உடை அணிந்து கடமைக்கு வர கூடாது என்றும் இதை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இதனைக் கவனத்தில் எடுத்து எமக்கு நியாயம் பெற்றுத் தாருங்கள் என இதனால் பாதிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் இனவாத போக்கை கையில் எடுத்துள்ள அரச அதிகாரிகளுக்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது இந்த உத்தரவின் பின்னால் இந்த அரசு தான் உள்ளதா என்ற சந்தேகம் உருவாகிறது.

குறித்த பதவிகளுக்குரிய சீருடைக்கு மேலதிகமாக முஸ்லிம் பெண் ஊழியர்கள் தமது கலாச்சார ஆடைகளை காலாகாலமாக அணிந்து வருகின்றார்கள். இதனை இப்போது அகற்ற சொல்லுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும். இனவாதத்தை தற்போது கையில் எடுத்துள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம்: பிமல் விடுத்த இறுதி எச்சரிக்கை

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம்...

– பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....