ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் சனி (02) ஞாயிறு (03) திகதிகளில் நடைபெற்றது.
‘உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்’ என்ற தொனிப் பொருளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது
செயலமர்வில் வளவாளர்களாக ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகமும், முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருமான எம். எம் .முஹம்மத், கிழக்கு மாகாண முதலமைச்சரின் முன்னாள் பிரதம செயலாளர் யூ.எல்.அஸீஸ், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் முஹம்மத் அஜ்வதீன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரிஎம். ராபி ஆகியோர் பயனுள்ள கருத்துரைகளைத் தெரிவித்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எம்.எம்.முஷர்ரப், ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
அத்துடன், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஆகியோரும் இதில் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் நன்றி உரை நிகழ்த்தியதையடுத்து, இந்த செயலமர்வு இனிதே நிறைவுற்றது.