இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

Date:

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பினை அண்மையில் வழங்கியிருந்தன.

இந்த வாய்ப்பைப் பெற்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இத்தரப்பினர், இலங்கைக்குத் திரும்பியதும் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இலங்கையின் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடனான சந்திப்பொன்றை வெள்ளிக்கிழமை (08) கொழும்பிலுள்ள தாஜ் கொழும்பிலுள்ள சமுத்ரா ஹோட்டலில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.

 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கையின் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில், 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல் தலைவர்கள், தங்கள் இந்தியப் பயணத்தின் போது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

இங்கு, இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வித் துறையில் காணப்படும் நவீனத்துவம், கலாச்சார உறவுகள் மற்றும் ஜனநாயக மரபுகள் உள்ளிட்ட பல துறைகளில் கருத்துக்கள் முன்வைத்து தாம் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 10 people and dais

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...