பாதுகாப்பு செயலாளர் – ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சந்திப்பு: இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராய்வு

Date:

இலங்கைககான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல்அமெரி, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கிடையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில்  (13) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர், குறிப்பாக பாதுகாப்பு உற்பத்தி, சைபர் பாதுகாப்பு, தகவல் பகிர்வு மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது பணிபுரிந்துவரும் இலங்கையர்களினால் வழங்கப்படும் பாரிய மனித வளத்தின் பங்களிப்புகள் தூதுவரால் பாராட்டப்பட்டதுடன், தனது நாட்டின் வளர்ச்சியில் இலங்கையர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் தூதுவருக்கு பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...