வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

Date:

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர்.

கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு ‘முத்தையன்கட்டு முகாமிற்குள் ஒருதரப்பினர் அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிட்டு, இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தது.

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும், இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த மரணத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

Popular

More like this
Related

வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்

இன்றையதினம் (27) நாட்டின் வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்...

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த...

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு!

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள்...