2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% அதிகரித்துள்ளது.
சர்வதேச விமான சேவைகள் 17 வீதத்தாலும், உள்நாட்டு விமான சேவைகள் 10 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.
2025 மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை அதிக வளர்ச்சியை காட்டியுள்ளதுடன், அது 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 22 வீத அதிகரிப்பை காட்டியுள்ளது.
ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை அதிக வளர்ச்சியை காட்டியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 38% அதிகரிப்பை காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் சுற்றுலாப் பருவத்தின் ஆரம்பத்தில், விமானப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் விமான நிலைய அதிகாரசபை சுட்டிக்காட்டிள்ளது.