2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

Date:

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 07ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 2ஆவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான உரை மற்றும் அதன் மீதான விவாதம் தொடர்பில் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு பாராளுமன்ற செயலாளருக்கு நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எம்.எம்.சி.பி மொஹொட்டிகெதர கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...