நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Date:

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சில இடங்களில் 50 மில்லிமீற்றரிற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டவலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிலாபம் தொடக்கம் மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து அல்லது மேற்குத் திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படும்.

மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான அம்பாந்தோட்டை ஊடாக கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

 

மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான அம்பாந்தோட்டை ஊடாக கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

 

Popular

More like this
Related

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள்...

இன்று முதல் ஆசனப்பட்டி அணியாவிட்டால் அபராதம்

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணியாவிட்டால்...

மதஸ்தலங்களை புனரமைக்கும் திட்டம் நாளை ஆரம்பம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைப்பதற்காக உறுதியான பிணைப்பை உருவாக்குவோம் தேசிய வேலைத்திட்டத்தின்...

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக...