முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீிதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் சட்டத்திரணிகளால் நிறைந்து காணப்படுகின்றது.
இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.