குளியாப்பிட்டிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியும் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குளியாப்பிட்டிய, பல்லேவெல, விலபொல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரு பாடசாலை மாணவர்களும், வேன் சாரதியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்தில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.