கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (29) பிற்பகல் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டாலும், நெருக்கமான வைத்திய மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் அவரது குடும்ப வைத்தியர்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள்.