வெள்ளவத்தை பள்ளிவாசலில் 106 பேரின் ரகசிய வாக்கெடுப்பில் உலமா சபை தலைவர் நாளை தெரிவு

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமை மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான தெரிவு நாளை சனிக்கிழமை (30) வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

உலமா சபையின் மத்திய குழு அங்கத்தவர்கள் 106 பேரும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

தெரிவாகும் 30 பேர்களில் இருந்து நிர்வாகத்துக்கான 11 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மூன்று வருட கால ஆயுளைக் கொண்ட சபையில் தலைவர் 3 தடவை மட்டுமே பதவியில் இருக்கும் விதமாக உலமா சபையின் யாப்பு திருத்தப்பட்டுள்ள நிலையிலேயே இம்முறைய தெரிவு நடைபெறுகின்றது.

64 வயதான அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கடந்த 21 வருடங்களாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவராக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உள்ளக முரண்பாடுகளை அரசிடம் முன்வைத்த முஸ்லிம் சிவில் சமூகம்: நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என அரச தரப்பு பதில்

முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் அரசாங்கத் தரப்புக்கும் இடையிலான மூன்றாவது சுற்று சந்திப்பு...

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ரணில்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று...

அத்துரலிய ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம்...

அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் முன்னிலை

நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் ...