செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!- ஜனாதிபதி

Date:

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (01) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக அநுர பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாண விஜயத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின் போது செம்மணிக்கு வருகை தருவது குறித்து நீதிமன்றுக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் நேற்று (31) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற...

இறைத் தூதர் மீதான பொறுப்புக்களை உணர்த்திய ஜும்ஆ உரை!

நிதா பவுண்டேஷன் தலைவர் ஹஸன் பரீத் அவர்களின் இன்றைய(05.09.2025) தெஹிவலை முஹைதீன்...

மீலாத் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் விநியோகம்

புத்தளம், மன்னார் சாலை 4ஆம் மைல் கல் விலுக்கை கிராம பள்ளிவாசல்,...