ஸ்பெயினிலிருந்து காசா நோக்கி புறப்பட்ட உதவிப் படகுகள்: 44 நாடுகள் இணைந்த மாபெரும் கடல்வழி பயணம்

Date:

பலஸ்தீனப் பகுதியின் மீதான இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் நோக்கில் மிகப்பெரிய முயற்சியாக,  மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆர்வலர்களுடன் ஸ்பெயின், பார்சிலோனாவிலிருந்து  படகுகள் குழுவொன்று காசாவுக்கு புறப்பட்டுள்ளது.

இதில் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க்கும் இணைந்துள்ளார். காசா நகரத்தின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, பலஸ்தீன பிரதேசத்தின் வடக்கே உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களின் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நகரம் பஞ்சத்தில் இருப்பதாகவும், அந்தப் பகுதி முழுவதும் அரை மில்லியன் மக்கள் பேரழிவு தரும் அளவிலான பசியை எதிர்கொள்வதாகவும் உணவு நிபுணர்கள் எச்சரித்தனர்.

44 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய இந்த கடல்வழிப் பயணம், 18 ஆண்டுகளாக நீடித்து வரும் காசாப் பகுதியின் கடல் வழியாக இஸ்ரேலிய முற்றுகையை முறியடிக்க  மிகப்பெரிய முயற்சியாகக் கூறப்படுகிறது.

மத்தியதரைக் கடலின் மேற்கு முனையிலிருந்து காசாப் பகுதிக்குச் செல்லும் பாதையில், இத்தாலி மற்றும் துனிசியாவில் உள்ள துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் அவர்களுடன் சேரும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பார்சிலோனா கப்பல் தளத்தில் குவிந்து, “சுதந்திர பலஸ்தீனம்” மற்றும் “இஸ்ரேலைப் புறக்கணி” என்று கோஷமிட்டு, பழைய சொகுசு படகுகள் முதல் சிறிய மரப் படகுகள்  மற்றும்  கப்பல்கள் வரை  அனுப்பினர்.

பயணத்தின் இறுதிப் பயணத்தில் சுமார் 70 படகுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் சைஃப் அபுகேஷேக் ஸ்பானிஷ்   தெரிவித்தார். செப்டம்பர் 14 அல்லது 15 ஆம் திகதிகளில்  காசாவை அடையக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...