காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் விசேட குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

Date:

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...