எல்ல – வெல்லவாய விபத்தில் 15 பேர் பலி

Date:

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பேருந்து விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...