இறைத் தூதர் மீதான பொறுப்புக்களை உணர்த்திய ஜும்ஆ உரை!

Date:

நிதா பவுண்டேஷன் தலைவர் ஹஸன் பரீத் அவர்களின் இன்றைய(05.09.2025) தெஹிவலை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் குத்பாவில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிட்ட சில முக்கியமான விடயங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை,

1. இன்று மீலாத் விடுமுறை நாள். ஆனால், முஸ்லிம் அல்லாத சிலர் இன்று அல்லாஹ்வின் பிறந்த நாளா என்று கூட கேட்டார்கள். நாம் அல்லாஹ்வை, நபிகளாரை இந்த மக்களுக்கு விளங்க வைக்கவில்லை.

2. கடந்த காலத்தில் அரசர்களது மிக நெருக்கமானவர்களாக முஸ்லிம்கள் இருந்து பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்திருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அரசர்களுக்கு இஸ்லாத்தை அவர்கள் எடுத்துச் சொல்லவில்லை.

3. முஸ்லிம்கள் நபியவர்களை புகழ்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்களை எமது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.எமது கொடுக்கல் வாங்கல்கள்,அன்றாட நடவடிக்கைகளில் இஸ்லாத்தை நாம் பின்பற்ற வேண்டும்.

4. இஸ்லாத்தை நபிகளாரைப் பற்றிய நூல்களை அச்சிட்டு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. இன்று மீலாத் தினமாக இருப்பதனால் நபியவர்களைப் பற்றி சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு நூலை உங்களது அயல் விட்டாரான சிங்கள சகோதரர்களுக்கு இலவசமாக வழங்க முடியும். அதனோடு சேர்த்து ஒரு பரிசுப் பொருளையும் நீங்கள் எடுத்துச் செல்வது நல்லதாகும்.

குத்பா முடிவடைந்த பின்னர் அவர்களை நான் சந்தித்து இஸ்லாத்தை சிங்கள மொழியில் தெளிவாக முன் வைப்பதற்கான சிங்கள மொழி தாயீக்களை உருவாக்குவதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதுடன் அது பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அபிப்பிராயம் தெரிவித்த போது அதனை பெருமனதோடு அவர்கள் வரவேற்றார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான தஃவா விடயத்தில் நிதா பவுண்டேஷன் பல முயற்சிகளை செய்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

ஆனால் இத்துறை மென்மேலும் திட்டமிட்டு வளர்க்கப்பட வேண்டும்.

Usthad S.H.M.Faleel Naleemi

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...