நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்: அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

Date:

நேபாள அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் சர்மா ஒலி அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் நேபாள அரசின் ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் காத்மண்டுவில் திங்கள்கிழமை திடீரென போராட்டத்தைத் தொடங்கினர்.

சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை திங்கட்கிழமை இரவு நீக்கப்பட்ட போதிலும், பிரதமரைப் பதவி விலகக் கோரி செவ்வாய்க்கிழமையும் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

காத்மண்டுவில் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்கள், சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் நேபாள விவசாயத் துறை அமைச்சர்  ராம்நாத் அதிகாரி தற்போது பதவி விலகி உள்ளார். காத்மாண்டுவை உலுக்கி வரும் இளைஞர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் இரண்டு முக்கிய அமைச்சர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மிகப்பெரும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

இதனிடையே போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஒலி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கடினமான சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

Gen Zஇளைஞர்களின் மோசமான போராட்டங்கள்:முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி பலி!

நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில்,...

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு...

தோஹாவில் இஸ்ரேல் தாக்குதலால் கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கத்தார் கடும் கண்டனம்

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு...

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்களின் வலுக்கும் போராட்டம்: பாராளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ வைப்பு

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில்,...