இனி பலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது இஸ்ரேல் பிரதமர்

Date:

இனி பலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
 
பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நெதன்யாகு கையெழுத்திட்டார்.
 
மேலும் மேற்கு கரையில் மாலே அடுமிம் குடியேற்றத்தை நேரில் பார்வையிட்டார்.
 
இதன் பின் பேசிய நெதன்யாகு , “எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்” என்று கூறினார்.
 

இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...