காசா யுத்தமும் அரபு நாடுகளும்: 2025 இறுதி முதல் 2030 வரை கடும் இராணுவ போராட்டங்கள் காத்திருக்கின்றன’

Date:

-எம்.என் முஹம்மத்

நெதன்யாகு மிகத் தெளிவாக பலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை என UN இல் கூறி விட்டான்.

அமெரிக்கா மிகத் தெளிவாக ஆயுத, பண உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குகிறது .

டோஹோ தாக்குதல் சமாதானத்திற்கான சகல கதவுகளும் மிகத் தெளிவாக மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க, இஸ்ரேலின் அடுத்த இலக்கு நன்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள டுபாய்,டோஹோ ,ரியாத் போன்ற நகரங்களை அழித்து மத்திய கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாடில் கொண்டு வருவது.

அரபு நாடுகள் இப்போது நிலமையை நன்கு உணர்ந்துள்ளனர் .சகல அரபு நாடுகளிலும் அமெரிக்க தளம் உள்ள நிலையில் என்ன செய்வது என சிந்திக்க முன் அரபு நாடுகளில் அமைதி இன்மையை ஏற்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளது.

சவுதியிலும், எகிப்திலும் சிறையில் உள்ள இஹ்வானிய, முற்போக்கு சிந்தனை உள்ள சலபி அறிஞர்களை விடுதலை செய்வது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறி உள்ளது.

அரபு இராணுவமும் , ஆட்சியாளர்களும் பலவீனமாக உள்ள நிலையில் அமெரிக்கா ஈரானுடன் மறை கர உடன்பாடு ஒன்றை உருவாக்கி ஹவ்திகள் ஊடாக சவுதியை தாக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

தற்போதைய ஈரானிய ஜனாதிபதி மேலைத்தேய சார்பு சிந்தனை உடையவர் என்பது பொது அவதானமாகும். ஆனால் ரஷ்யாவின் கரம் ஓங்கினால் ஈரான் இவ்வாறான அமெரிக்க உடன்பாட்டை விட்டு விட்டு அரபு -ஈரான் உடன்பாட்டை நோக்கி நகர நிறைய வாய்ப்புள்ளது. அது தொடர்பாக ஈரான் ஜனாபதி பகிரங்க வேண்டு கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய உலகு மிக வேதனை மிக்க காலகட்டதில் உள்ளது ,காஸா போராளிகள் ஒரு நீண்ட தயார் நிலையான கொரில்லா போர் ஒன்றிற்கு ஏற்றவாறு தமது இராணுவ கட்டமைப்பை மாற்றி உள்ளது.

பிரான்ஸ், துருக்கி ஒரு பெரிய யுத்தம் ஒன்றிற்கு தயாராகிறது. சைப்ரஸ் நோக்கி இஸ்ரேல் பெருமளவு ஆயுதங்களை நகர்த்துகிறது, ரஷ்யா போலாந்தை சீண்டிப் பார்க்கிறது.

இவை சொல்லும் மிகப் பெரிய செய்தி 2025 கடைசிப் பகுதியும் ,2026-2030 வரையான காலப்பகுதி மிகவும் கடுனமான இராணுவ போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்: கத்தார் நடத்தும் அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு!

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து  அரபுலக தலைவர்கள்...

பஸ்களை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிரூபம் இரத்து!

பஸ்களை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள்...

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி

இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய...