அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி – ஒரு நடைமுறை அணுகுமுறை என்னும் தலைப்பிலான செயலமர்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (ORCHID) கூடத்தில் இடம் பெறவுள்ளது.
இம்மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை மேற்படி செயலமர்வு இடம் பெறவுள்ளதாக அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.
நிகழ்வின் வளவாளராக டாக்டர் ஹஜாரா சதாம் (PhD, Bsc, Msc, PGd, மருத்துவ உளவியலாளர் & விரிவுரையாளர்) கலந்துகொண்டு செயலமர்வை சிறப்பிக்க உள்ளார்.
இச் செயலமர்வில் பின் வருவோர் கலந்து கொள்வதன் மூலம் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
* ஆசிரியர்கள்
* பாலர் பள்ளி ஆசிரியர்கள்
* தன்னார்வலர்கள்
* உளவியல் துறை மாணவர்கள்
* பல்கலைக்கழக மாணவர்கள்
* யுனானி மருத்துவர்கள்
* ஆயுர்வேத மருத்துவர்கள்
* ஆலோசகர்கள்
* இல்லத்தரசிகள் இவர்களுடன்
* பல்துறை சார்ந்தவர்களுக்கும் மேற்படி செயலமர்வு அதி கூடிய நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.
பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் உடனடியாக +94 76 52 04 604 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அமேசன் பணிப்பாளர் வேண்டியுள்ளார்.
அதேவேளை இச் செயலமர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.