கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச் சுத்திகரிப்பை கண்டித்தும், உடனடியாக போரை நிறுத்தக் கோரும் நோக்கில், மாபெரும் பேரணி நாளை வெள்ளிக்கிழமை (19) மாலை 4.30 மணிக்கு சென்னை நகரில் நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், மனிதநேய செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
இப்பேரணியைப் பற்றிய தகவலை, தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள காணொளி செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளார்.