2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எனவே பரீட்சார்த்திகள் 2025 செப்டம்பர் 18ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வரை நிகழ்நிலையில் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 09 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் இப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாது. எக்காரணத்திற்காகவும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.