சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத பல முக்கியஸ்தர்கள் பட்டியல் வெளியீடு

Date:

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இவர்களில் 1 முன்னாள் அமைச்சர், 4 முன்னாள் மாகாண ஆளுநர்கள், 6 முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், 29 முன்னாள் தூதுவர்கள் மற்றும் 2 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர்.

 

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத முன்னாள் அமைச்சர், முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

 

முன்னாள் ஆளுநர்களான மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க மற்றும் வில்லியம் கமகே ஆகியோர் குறித்த திகதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை.

அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான லோஹான் ரத்வத்தே, தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கடந்த 9 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,897 பேர் உயிரிழப்பு!

கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக...

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள்...

ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்...