அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், பல்வித அத்தாட்சிப்படுத்தும் செயன்முறைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தரவுகளை உட்சேர்ப்பதற்குத் தேவையான அரச சேவைகளை வழங்குவதற்காக சமகாலத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அணுகுமுறைகளால், பிரஜைகளுக்கு குறிப்பிடத்தக்களவு சிரமங்கள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருடாந்தம் 500 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பொருளாதாரப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றமையும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதனால், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்திற்கமைய, பிரஜைகளுக்கு தனியான கணணி செயலியொன்றின் மூலம் அரச சேவைகளை வழங்குவதற்காக, விரிவான விடயங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் ‘அரசாங்க சுப்பர் அப்’ செயலியை (Government SuperApp) அபிவிருத்தி செய்வது மூலோபாய முன்னுரிமையாக அடையாளங் காணப்பட்டுள்ளது.