கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம், மீலாதுன் நபி விழா உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் (ஹாஜா ஸுபைதா எம்.ஏ. கரீம் ஞாபகார்த்த மண்டபம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.
இலங்கை வக்புசபை அங்கத்தவர் மெளலவி அல்ஹாஜ் எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், அல்லலமுல்ல பஸ்யால ஸபீலுற்றஷாத் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஐ.எம். சுஐப் (தீனி பின்னூரி) சிறப்புரையாற்றவுள்ளார்.
ஓய்வுபெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் பாராட்டுரையையும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம். இக்ராம் அஹ்மத் பாரி (பி.ஏ. சிறப்பு) விஷேட உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.